~ WELCOME TO MANNAR ~ "வணக்கம்" உங்கள் வருகைக்கு நன்றி.
~உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனையை எமக்கு தெரிவித்தால் சம்மத்தபட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்...

19 May 2012

மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் - ஆசிய மனித உரிமை ஆணையகம்

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்புவின் பாதுகாப்புத் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகமானது தனது கவலையைத் தெரிவித்துள்ளது. 

18 May 2012

வவுனியாவில் மக்கள் உறவுகளுக்கு அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுட்டிக்கப்பட்டது. வன்னி யுத்தத்தில் உறவுகளை இழந்த பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் படுகாயம்


யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், இன்று காலை இனந்தெரியாத குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரான தர்ஷானந்த் இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது, கலட்டிச் சந்திக்கருகில் மறித்த குழு ஒன்று இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளது. 

17 May 2012

நாளை கரிநாள்; மரணித்தோருக்காக வீடுகளில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறு 18 மே இயக்கம் அழைப்பு


2009 மே 18இல் முள்ளிவாய்க்கால் எமக்குத் தந்த துயரை நினைவு கூரும் வகையில் நாளைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறும் நாளை மாலை 6.10 மணிக்கு வீடுகளில் சுடரேற்றி அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு மௌன வணக்கத்தை செலுத்துமாறும் 18 மே இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 
 

மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுவந்து துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர்: 18ஆம் திகதி அஞ்சலி நிகழ்வுக்கு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு.

எமது உரிமைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். இருந்தபோதிலும் இங்கு சென்றால் காப்பாற்றப்படுவோம், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று இறுதி நேரத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஓடி ஓடி இறுதியில் காலனிடம் தம் உயிரைப் பறிகொடுத்த எம் உறவுகள் எத்தனைபேர் என்று இன்றுவரை கணக்கிட முடியவில்லை' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அடம்பன் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி அமைதி ஊர்வலம்

மன்னார் மாவட்டத்தின்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் தங்கியிருந்து பணியாற்றும் நிரந்தர வைத்தியர் ஒருவரை உடனடியாக  நியமிக்குமாறு கோரி அடம்பன் கிராம பொது அமைப்புக்களும்  பொதுமக்களும் இன்று புதன்கிழமை அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். 

வலிகள் தந்த வாரம்! முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!


இந்தச் செய்தியின் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
”வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!”
” உரிமைக்காய் குரல் கொடுப்போம்!”
”நீதிக்காய் போராடுவோம்!”
”உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை!”

16 May 2012

மன்னாரில் “கனவுகள்” இசைத்தொகுப்பு (Music Album) வெளியீடு

மன்னாரில் முதல் தடவையாக தென்னிந்திய இசைக்கு இணையாக "கனவுகள்" என்னும் இசைத்தொகுப்பு 13 - 05 - 2012 அன்று மிகவும் கோலாகலமாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் வெளியிடப்பட்டது, இவிறுவெட்டு 04 பாடல்களை உள்ளடக்கியுள்ளது, இதற்கான பாடல் வரிகளை கவிஞர் மேரியஸ்.M.ராஜ்குமார் எழுதியுள்ளார் இதற்கு இசை அமைத்தவர் சிவலிங்கம் தனுஷாந்த். இளம் இசையமைப்பாளர் தனுஷாந்தின் முதல் இசைத்தொகுப்பு இதுவேயாகும்.

14 May 2012

பதியுதீனின் கருத்து தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது- வினோ எம்.பி. _

மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விதம் ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களின் மனதையும் புண்படுத்தியுள்ள செயல் எனவும் அமைச்சரின் கூற்றிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் மன்னார் ஆயரை வைத்து போக்கிரித்தனமான அரசியலை நடத்துகின்றார்!


தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத அமைச்சர் றிஷாட் பதீயுதீன் ஆயர் தொடர்பில் இனவாதப் போக்குடன் பேசுகின்றமை போக்கிரித்தனமான அரசியலையே காட்டி நிற்பதாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

13 May 2012

வயிற்றோட்டம் காரணமாக மன்னாரில் 80இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் நகரின் மூர்வீதி, சின்னக்கடை, உப்புக்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் வயிற்றோட்டம் பரவிவருகின்றன.  வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும்  இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் எனவும்  அவர் கூறினார்.

12 May 2012

மன்னாரில் அரசுக்கு வாக்களித்தவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படுகின்றன

தற்போது மன்னார் மாவட்டத்தில் முக்கியமாக அரசியல் தலையீடுகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது மன்னாரில் இடம் பெற்று வருகின்ற நேர்முகத்தேர்வில் 600 இற்கு மேற்பட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றது. குறித்த நியமனங்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

11 May 2012

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் சி.ஐ.டி விசாரணை!?

மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி. வண. பிதா  இராயப்பு ஜோசப் ஆண்டகையை, இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆயர் இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் ஆயரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Popular news- Last 30 days

சிறப்புக் கட்டுரை

புகைப்படங்கள்

காணொளி

அறிவித்தல்

அன்பான எம் உறவுகளே உங்களின் கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /தேவாலய ,கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் எம் இணையத்தினூடாக பகிர்து கொள்ள ஆவலாக உள்ளீர்கலா உடனே எங்களுக்கு உங்களிடம் இருக்கும் காணொளிகள்,புகைப்படங்கள்'ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் செய்திகள் தரமாயின் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க நாம் காத்திருக்கின்றோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com

  © மன்னார் இணையம் The Professional Template by newmannar.com 2008

Back to TOP