Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா....படங்கள் இணைப்பு



வருடாவருடம் கொண்டாடப்படுகின்ற உழவர் விழாவானது இம்முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.  இன்று 24-01-2017 காலை பத்துமணிக்கு பொங்கல் நிகழ்வு சூரிய வணக்கத்துடன் ஆரம்பமானது. சிறப்பு நிகழ்வாக உழவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வாக பொன்னாடை போர்த்தி  அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதுடன்  புதிய செயலகத்திற்கு முன்னாள்  அமைக்கப்பட்ட இடத்தில் மேளதாளவாத்திய இசையுடன் கண்கவரும் நடனங்களும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவிச்செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் அரச அதிகாரிகள் கலாச்சார மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உழவர்பெருமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 தொகுப்பு -வை-கஜேந்திரன்-















































மன்னாரில் ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் பூங்கா திறந்து வைப்பு....


மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி நூலகம் மற்றும் கணினி அறை, சிறுவர் விளையாட்டு பூங்கா என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மடு வலயக்கல்வி பணிப்பாளர், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 






மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு...

வருடாந்த 
இல்ல விளையாட்டுப்போட்டி... மரதன் ஓட்டம் கடந்த 12-01-2017  தொடக்க நிகழ்வாக நடைபெற்று அதன் தொடர்ச்சியாக இன்று 23-01-2017 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மதியம் 1-45 மணிக்கு ஆரம்பமான இல்ல விளையாட்டுப்போட்டியானது விருந்தினர்களை வாத்திய இசை முழக்கத்துடன் வரவேற்க கொடியேற்றும் நிகழ்வு அதனைத்தொடர்ந்து தீபச்சுடர் ஏற்றும்  நிகழ்வுடன் ஆரம்பமானது இவ்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன்  அரச அதிகாரிகள்  ஏனைய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைமாணவர்கள் மாணவர்கள்  பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கண்கவரும் விதத்தில் இல்ல அலங்காரங்கள்  மாணவர்களின் சாகாசங்கள் நிகழ்வுகள் அமைந்திருந்தது அத்துடன் அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றியீட்டிய மணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் கேடையங்களும் வழங்கப்பட்டது.
  விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த பிரமுகர்களுக்கு  கல்லூரி முதல்வர் அருட்சகோதரர்  ச.இ. றெஜினோல்ட் FSC  அவர்களினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது 



தொகுப்பு -வை-கஜேந்திரன்-


























































Photos