Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

வல்லரசுகளிடையே தணிகிறது பகைமை


ஒபாமா எட்டு வருடங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்கா இனவெறியிலிருந்து முழுவதும் விடுதலை அடையும் நாட்கள் நெருங்கி விட்டன என்று பலரும் நம்பினார்கள்.

ஆனால், “கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்பதால் இனவெறி மாயமாக மறைந்து விடும் என்று நினைக்கக் கூடாது” என்று ஒபாமா சொன்னார்.

அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது ட்ரம்பை வெள்ளைப் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுத்ததில் தெளிவாகத் தெரியவந்தது.

அமெரிக்காவின் வெள்ளைத் தன்மையை வெளியிலிருந்து கூட்டம் கூட்டமாக நுழைந்து கொண்டிருக்கும் இந்தியர்களும் சீனர்களும் மெக்சிகர்களும் மாற்றி விடுவார்கள் என்ற அச்சமும் ஹிலாரி தோற்றதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

ஒபாமா சிக்காகோ நகரத்தில் நிகழ்த்திய தனது கடைசி உரையை மிகுந்த நம்பிக்கையோடு முடித்தார்.

அமெரிக்க இளைஞர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அமெரிக்கா எல்லோரையும் அணைத்துக் கொண்டு வித்தியாசமே இல்லாமல் நடத்தும் என்பதிலும் அவர் ஐயம் இல்லாமல் இருக்கிறார்.

ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரத்தை விட, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது மற்றைய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைத்தான்.

ஒபாமாவின் ஆட்சி, அமெரிக்காவின் அசாதாரணமான வலிமை இறங்குமுகத்தில் இருக்கும் வரலாற்றுத் தருணத்தில் நடைபெற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவும் சீனாவும் பிடிக்குள் வராமல் திமிறிக் கொண்டிருந்தன.ஐரோப்பிய நாடுகள் திரும்பவும் தேசியப் பாதையில் செல்லலாமா என்று யோசிப்பில் இருந்தன.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுப் போர். ஈரான் அது நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிடி நழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய ஒபாமா முயன்றார்.

சில இடங்களில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வெற்றி கண்டது. கியூபா, ஈரான் போன்ற நாடுகளோடு அமெரிக்காவின் உறவு வலுவடைந்தது.

ஆனால் தனது வெளிநாட்டுக் கொள்கையைக் குண்டுகளின் மூலமும் கைமுறுக்கல்கள் மூலமும் பரப்ப அமெரிக்கா ஒபாமா காலத்தில் தொடர்ந்து முயன்றிருக்கிறது.

2016- ல் 25,000ற்கும் மேற்பட்ட குண்டுகளை மற்றைய நாடுகள் மீது (குறிப்பாக ஈராக், சிரியா) பொழிந்திருக்கிறது.

ஒபாமா ஆட்சியில்தான் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு ஆட்டம் கண்டது.

ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் கறுப்பினத்தவர் மட்டும் அன்றி, ஹிஸ்பானிக் என்று அழைக்கப்படும் மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்காவிலிருந்து இங்கு குடியேறியவர்களுக்கும் உலகமே முடிவடையப் போகிறதோ என்ற அச்சம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தனது முதல் சந்திப்பிலேயே பத்திரிகையாளர்களை, குறிப்பாக சி.என்.என் தொலைக்காட்சியினரை ஒரு பிடிபிடித்தார் ட்ரம்ப்.

அடுத்த நான்கு வருடங்களில் பல வாண வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பனவற்றில் நம்மைப் பொறுத்த வரையில் முக்கியமானவை இவை: -

முதலாவதாக, மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக எல்லை கடப்பதைத் தடுக்கத் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும். சுவர் எழுப்புவதற்குத் தேவையான பணம் மெக்சிகோவிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று ட்ரம்ப் சொல்கிறார். எப்படி வசூலிக்கப்படும் என்பதைப் பற்றிச் சொல்லவில்லை. ஏழை நாடு என்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மெத்தனமாக இருக்கலாம். மற்றைய வலுவில்லாத நாடுகளை அவர் எப்படி நடத்துவார் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம்.

இரண்டாவதாக, ரஷ்யா ஹேக்கிங் தாக்குதல் நடத்தியது என்று உளவுத்துறை கூறுவதை ட்ரம்ப் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. இதே உளவுத்துறைதான் சதாம் ஹுசைன் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று சொல்லிக் கொண்டிருந்ததுஎன்று அவர் சுட்டிக் காட்டினார்.எனவே ரஷ்யாவுடன் நிலைமையைச் சீர்ப்படுத்த அவர் முயல்வார் என்பதில் ஐயம் இல்லை. ஐரோப்பிய நாடுகள் இந்த முயற்சியை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், உலகின் இரு வலுவான நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் தற்காலிகமாகக் குறைந்து விட்டது என்று சொல்லலாம். பெற்றோலியப் பொருட்களின் விலை ஆகாயத்தைத் தொடும் வாய்ப்பும் குறைந்து விட்டது.

மூன்றாவதாக, சீனாவுடன் அமெரிக்காவின் உறவு சீராகும் என்று சொல்ல முடியாது. அமெரிக்க வேலைகள் சீனாவுக்குச் சென்று கொண்டிருப்ப தாக அவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க முதலாளிகளுக்கும் அவருக்கும் இடையே இது குறித்து உரசல்களை எதிர்பார்க்கலாம்.

நான்காவதாக, அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் ஃப்ளின். இவரும் ரஷ்யாவுடன் நல்லுறவை விரும்புபவர். தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்பாளர். இவரும் ட்ரம்பும் ஒன்றுசேர்வது இஸ்லாமிய நாடுகளுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை நசுக்கும் நடவடிக்கைகள் முடுக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ட்ரம்ப் இந்தியாவைப் பற்றிப் பொருட்படுத்தக் கூடிய அளவில் இதுவரையில் எதுவும் சொல்லவில்லை. எதிர்காலத்தில் இந்தியாவை எவ்வாறு எதிர்கொள்வார் என்பது பற்றி சரியான புரிதல் இன்னும் யாருக்கும் இல்லை.

பிரான்சில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளராக களமிறங்குவது யார்?


பிரான்சில் ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக உள்ள பிராங்கோய்ஸ் ஹோலண்டே மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட விருப்பமில்லை என அறிவித்துவிட்டார்.

எனவே சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்யும் முதற்கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது.

பிரதமராக பதவி வகித்து வந்த மானுவல் வால்ஸ் வேட்பாளர் தேர்வில் குறிப்பிடும்படியானவர் என்றபோதிலும், வெற்றி பெற குறைவான வாய்ப்பே உள்ளதாக கருதப்படுகிறது.

வலதுசாரியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரான்சுவா ஃபில்லான், தீவிர வலதுசாரியான தேசிய முன்னணிக் கட்சியைச் சேர்ந்த மரீன் லெபென் ஆகியோருக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் சோசலிசக் கட்சி சார்பில் இறுதி கட்ட தேர்வு வரும் 29ம் திகதி நடைபெறும், இதன்போதே யார் வேட்பாளர் என்பது முடிவாகும்.

அரசு கஜானா பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிய ஜனாதிபதி...


காம்பியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற ஜனாதிபதி அரசு கஜானா பணம் முழுவதையும் சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ளது.

காம்பியா நாட்டிற்கு Yahya Jammeh என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததும் ‘தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது. இதில் சதி நடந்துள்ளது’ என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக நடந்துள்ளது என மாகாணத் தலைவர்கள் பேச்சு வார்த்தையின் இறுதியில் கூறியுள்ளனர்.
மேலும், தேர்தலில் தோல்வியுற்றதால் ராணுவத்தால் தனக்கு ஆபத்து வரலாம் என எண்ணிய Yahya Jammeh, நாட்டை விட்டு தப்புவதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக அரசு கஜானாவில் இருந்த கோடிக்கணக்கான பணத்தையும் சுருட்டிக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர், கடந்த சனிக்கிழமை இரவில் தனக்கு சொந்தமான சொகுசு கார்களையும் விமானத்தில் ஏற்றி அந்நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள Adama Barrow-வின் அரசு ஆலோசகர் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மேலும், அரசு கஜானாவில் காணாமல் போன சொத்துக்கள் அனைத்தையும் மதிப்பிட்ட பிறகு முன்னாள் ஜனாதிபதி மீதான சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்: பல நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம்: பீதியில் மக்கள்


பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் இடையே அமைந்துள்ள Bougaineville தீவு அருகே சுமார் 168 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து அருகில் உள்ள தீவுகளை சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா, சமோவா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, டோங்கா, நியூ கலிடோனியா மற்றும் பிற சுற்றியுள்ள தீவுகளில் 0.3 மீட்டர் என குறைவாக அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஏற்படும் சுமார் 90 சதவீத நிலநடுக்கும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் சாலமன் தீவுகளில் ஏற்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

தீயில் கருகி பள்ளி குழந்தைகள் உட்பட 16 பலி: இத்தாலியில் கோர விபத்து...


இத்தாலியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் தீயில் கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெரோனா பகுதியலே குறித்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஹங்கேரியை சேர்ந்த 16 முதல் 18 வயதுடைய பள்ளி குழந்தைகள் பிரான்ஸிற்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய தூணின் மீது பயங்கரமாக மோதி தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த கோர விபத்தில் அந்தப் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 16 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பேருந்தை இயக்கிய பிரஞ்சு ஓட்டுநரும், அவரது குடும்பமும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த இத்தாலி தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த 39 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான் (Video&Photos)

சொன்னபடி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசும் வழங்கிவிட்டார் சீமான்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க கடந்த 16-ம் தேதி மதுரை வந்தார் சீமான். 'அரசியல்வாதிகள் எங்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்' என்று மாணவர்கள் கறாராக அறிவித்ததால், தமுக்கம் அருகே அவுட் போஸ்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக 17-ம் தேதி தனியாக போராட்டத்தை தொடர்ந்தார்.

அப்போது, போராட்டம் குறித்து பேசிய சீமான், "வருகிற 21-ம் தேதி (இன்று) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று சொன்னவர், அதுவரை மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

சொன்னபடி இன்று அதிகாலை ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளார் சீமான். 'அலங்காநல்லூரில் நடத்துவேன்' என்று அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர். அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்திவிட்டார் சீமான்.


இதற்கான ஏற்பாடுகளை மிக ரகசியமாக செய்த அவரது கட்சியினர், மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி வரவழைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். தகவல் வெளியாகிவிடும் என்பதால் குறிப்பிட்ட ஒரு சேனலை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார். சீமானைத் தொடர்ந்து கண்காணித்து வந்த உளவுத்துறையால் கூட ஜல்லிக்கட்டு நடத்தப்போகும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு! அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!


தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் தயாரித்திருந்தது. இதையடுத்து இந்த சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு, இந்த சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த சட்ட வரைவை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து இன்று இரவுக்குள்ளே குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Live Feed
தமிழகத்தில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம்! அன்றிலிருந்து இன்று வரை...நேரடி பதிவுகள்

January 20, 201713 hours ago
ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வரவிருக்கிறார்.

அவர் ஞாயிறன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

January 20, 201715 hours ago
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வருகிற 22.01.17 திகதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி அளவில் Place de trocadéro et du 11 novembre, 75016, Paris, (metro 6) என்ற இடத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.

January 20, 201715 hours ago
மிருகவதை தடுப்புச் சட்டத்தில் காளைகளை காட்சிப்படுத்துதல் தடை தொடர்பான ஷரத்தில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

January 20, 201715 hours ago
அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், துபாய், இலங்கை, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது.


போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

January 20, 201717 hours ago
தமிழகத்தின் நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது, ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து காளைகளை அடக்கினர்

January 20, 201718 hours ago
புதுச்சேரியில் காளைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

January 20, 201718 hours ago
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஜனவரி 21, 22ம் திகதிகளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

January 20, 201718 hours ago
தமிழகத்தில் இருந்த 1 லட்சம் ஜல்லிக்கட்டு காளைகள், 40 ஆயிரமாக குறைந்துவிட்டன என்கிறார்கள். இப்படியே இன்னும் இரண்டு வருடங்கள் இதேநிலை நீடித்தால் காளைகளை உயிரியல் பூங்காக்களில் தான் பார்க்க முடியும் என ஹிப் ஹாப் தமிழா ஆதி வேதனை தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

January 20, 201720 hours ago

January 20, 201720 hours agoஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது, தயவுசெய்து போராட்டத்தை கைவிடுங்கள்- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
January 20, 201721 hours ago
"கானகன்” நாவலுக்காக வழங்கப்பட்ட 2016-ஆம் ஆண்டின் யுவபுரஸ்கார் விருதை, சாகித்ய அகாதமி அலுவலகத்தில் திரும்ப அளித்தார் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்.

January 20, 201721 hours agoமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு
January 20, 201722 hours ago
ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒருவாரம் ஒத்தி வைக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்

January 20, 201723 hours agoவாடிவாசல் திறந்து காளைகள் சீறிப்பாயும் வரை வீடுவாசல் திரும்ப மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
January 20, 201723 hours ago
ஜல்லிக்கட்டு ஓரிரு நாட்களில் நடைபெறும் என உறுதியளித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

January 20, 201723 hours ago
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், Free Sex தலைப்பை முன்வைத்து இப்போராட்டத்தை கேவலமாக விமர்சித்திருக்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன்.


உலகத் தமிழர்கள் அனைவரையும் தட்டி எழுப்பிய ஜல்லிக்கட்டு
- Vikatan-


அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு


அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.

இவர் ஏற்கனவே ஊடகவியலாளர்கள்., விமர்சகர்கள் என பலரைக் கண்டித்துப் பேசியிருப்பதனால் தனது பதவிக் காலத்தின் போது ஜனநாயக விரோத போக்கையே கடைப்பிடிப்பார் என்ற பரவலான எண்ணமும் இருக்கிறது.

அமெரிக்காவிலுளள முஸ்லிம்களை வெளியேற்றப் போவதாக இவர் அதிரடியாக வெளியிட்ட கருத்து உலகமெங்கும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அமெரிக்கா இஸ்லாமிய தேசம் என்ற பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள போதும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளில் பெரும் விரிசல் தோன்றக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

எப்படியோ டிரம்ப் அறிவித்தபடி நடந்து கொள்வாரா அல்லது பதவியேற்ற பின்னர் மாறிவரும் உலக அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கேற்ப தனது அரசின் கொள்கைகளை சரிசெய்து கொள்வாரா என்பதைத்தான் ஜனநாயக உலகம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.

வினோத பக்டீரியாவால் அலறும் அமெரிக்கா: இலங்கையிலும் பரவியதா?


இலங்கையில் உள்ள கண்டி வைத்தியசாலையில் அண்மையில் வினோத பக்டீரியா தாக்கத்திற்கு உள்ளாகி மூவர் பலியாகியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது எந்தவிதமான மாத்திரைகளுக்கும் பாதிப்புக்கு உள்ளாகாத வினோத பக்டீரியா ஒன்று அமெரிக்க வைத்தியசாலைகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பக்டீரியாவிற்கு ”Nightmare Bacteria” (கொடுங்கனவு பக்டீரியா) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் Carbapenem-Resistant Enterobacteriaceae (CRE) எனும் பக்டீரியாவினால் வருடாந்தம் 9,300 பேர் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 600 பேர் வரை உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்யும் நாடு: அதிர்ச்சி தகவல்!


உலகின் பல்வேறு நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இவர்களை எதிர்ப்பு வலுக்கும் நாடுகள், இவர்களுக்கு கடுமையான சட்டங்களை பிறப்பித்து இருக்கின்றன. அதன் மூலம் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தான் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி.

ஈரான்

கடந்த 1979 ஆம் ஆண்டுகளில் இருந்து ஓரினச் சேர்க்கையாளர்கள்(ஆண்கள்) என்பதற்காக சுமார் 4000 முதல் 6000 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நைஜீரியா

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என்றே கடுமையான சட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர்களை கல்லால் அடித்துக் கொல்லும் சட்டங்கள் கூட இருக்கின்றனவாம். ஒரு சில இடங்களில் அந்த ஆண்களை பெண்கள் போல் ஆடை உடைத்தி சிறையில் அடைத்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சவூதி

இந்நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் என்று கண்டறியப்பட்டாலே அவர்களுக்கு 100 கசையடி கொடுப்பது உறுதியாம்.

துருக்கி

ஓரினச்சேர்க்கையாளர்கள் அஞ்சி வாழும் நாடுகளில் ஒன்றாக இது இருக்ககூடும் என கூறப்படுகிறது. இந்நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தடைசெய்யப்பட்ட ஒன்று, மேலும் இங்கு 89 சதவீதம் ஒரினச்சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டொமினிக்கா

டொமினிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டால் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது என்றும் சில சமயங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்

கௌரவ கொலைகள் இந்நாட்டில் பொதுவானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறியப்பட்டாலும் கொலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

குண்டு மழை பொழிந்த நைஜீரிய ராணுவம்: 100க்கும் மேற்பட்ட அகதிகள் பலி...


நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாமில் அந்நாட்டு ராணுவம் தவறுதலாக குண்டு வீசியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியா நாட்டு ராணுவம் அந்நாட்டில் உள்ள போகோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் வான் வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதன்படி, அந்நாட்டு விமானப்படை இன்று ஜெட் ஏவுகணை மூலம் குண்டுவீச முற்பட்ட போது, தவறுதலாக அகதிகள் முகாம் ஒன்றில் அந்த குண்டு விழுந்துள்ளது.

இதில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட செஞ்சிலுவை அமைப்பினரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படுகாயமடைந்த 120 நபர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நைஜீரிய ராணுவத்தின் கமாண்டரும் தவறுதலாக குண்டுவீசப்பட்டதை உறுதிசெய்துள்ளார்.


66 பேரின் உயிரை பலியெடுத்த ஐபோன் பெட்டரி...! MS804 விமானத்தில் நடந்தது என்ன..?


ஐபோன் பெட்டரி தீப்பிடித்தமையின் காரணமாக எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS804 என்ற விமானம் வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானம் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ நோக்கி மத்திய தரைக்கடல் பகுதி வழியாக பயணித்த வேளை, வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணித்த 66 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், விமானத்தில் தீப்பரவியதன் காரணமாகவே, விமானம் வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. விமானம் வானில் சென்று கொண்டிருந்த போது, தீப்பிடித்தமைக்கான அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், குறித்த விமானத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த ஐபோன் பெட்டரி வெப்பமாகி தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தொடர்ந்து விமானத்தின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த தகவல் தொடர்பில் போதிய ஆதாரங்களுடன் உறுதி செய்யப்படவில்லை எனவும், கூறப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

தமது அனைத்து உற்பத்திகளும் உரிய சோதனைக்கு பிறகே விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்தது.
இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்த போதும், அவர்கள் கலைந்துசெல்லவில்லை.

இதற்கிடையில், கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எப்போதுவேண்டுமெனாலும் செல்லலாம் மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த முயன்றவர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது.

சமூக ஊடகங்களில் மன்னார் இணையம் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : மன்னார் இணையம்முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : மன்னார் இணையம் ட்விட்டர்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : மன்னார் இணையம் யு டியூப்

உலகின் மொத்த மக்களை விட இந்த எட்டு பேர் கெத்தாம்! யார் இவர்கள்?


உலகளவில் தற்போது தோராயமாக 7.5 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பாதி மக்களின் வருமானத்தை விட வெறும் எட்டு பேருக்கு அதிகளவிலான வருமானம் வருவதாக தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமான ஆய்வை வறுமை அநீதிக்கு போராடும் தனியார் அமைப்பான Oxfam சமீபத்தில் நடத்தியுள்ளது. அந்த எட்டு பேர் தான் இந்த உலகின் மிக பெரிய கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

அதாவது உலகின் பாதி மக்கள் தொகையான 3.6 பில்லியன் மக்களின் பணமதிப்பு $409 பில்லியன் ஆகும்.

உலக பணக்காரர்களான இந்த எட்டு பேரின் சொத்து மதிப்பு $426 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து Oxfamன் முதன்மை செயலாளர் Mark Goldring கூறுகையில், இதுவரை நாங்கள் இது சம்மந்தமான எடுத்த ஆய்வுகளை விட இந்த வருட ஆய்வு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

வெறும் எட்டு பேர் உலக மக்களில் பாதிப்பேரை விட அதிக பணம் வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு மனிதர்கள் உலகளவில் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

மேலும், 1988லிருந்து 2011 வரை உலகளவில் சாதாரண ஏழை மக்களின் வருமானம் வெறும் $65 அளவே உயந்துள்ளது.

ஆனால் பணக்கார்களின் வருமானம் $11,800 என்ற அளவில் அசாதாரணமாக உயர்ந்துள்ளது என Mark கூறியுள்ளார்.

அந்த எட்டு கோடீஸ்வரர்கள் பின்வருமாறு,

  1. Bill Gates $75 billion (£62bn)
  2. Amancio Ortega $67 billion (£55bn)
  3. Warren Buffett $60.8 billion (£50bn)
  4. Carlos Slim Helu $50 billion (£45bn)
  5. Jeff Bezos $45.2 billion (£37bn)
  6. Mark Zuckerberg $44.6 billion (£36.7bn)
  7. Larry Ellison $43.6 billion (£36bn)
  8. Michael Bloomberg $40 billion (£33bn)

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம்: தீப்பந்தாய் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு....


தாய்லாந்தில் விமான கண்காட்சியின்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தாய்லாந்தில் வெகுவிமரிசையாக விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சுவீடன் நாட்டின் JAS 39 Gripen விமானம் ஒன்று பார்வையாளர்களை சந்தோசப்படுத்தும் வகையில் சாகசங்கள் பல செய்து வந்த வண்ணம் இருந்தது. குறித்த விமானத்தினை 34 வயது விமானி Dilokrit Pattavee என்பவர் இயக்கி வந்துள்ளார்.

திடீரென்று குறித்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டினை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்ட தளத்தின் அருகாமையில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விமானி குறித்த விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் சம்பவயிடத்திலேயே விமானி Dilokrit Pattavee இறந்ததாக கூறப்படுகிறது.

நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு நின்ற அந்த நொடியில் தீ கோளம் போன்று விமானம் விழுந்து நொறுங்கியது குழுமியிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை...வெள்ள அபாயம்!


பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது பொதுமக்களை உறையவைக்கும் அளவிற்கு குளிர் நிலவி வருகிறது.

நாட்டின் பெரும் பகுதிகள் பனியின் பிடியில் சிக்கித் தவிக்கினறன. இதனால் கிழற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் Essex, Norfolk மற்றும் Suffolk போன்ற பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என்றும் இதனால் உயர் அலைகள் எழும்பலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்கரை பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மேலும் Jaywick, Essex and Great Yarmouth போன்ற பகுதிகளில் உள்ள மக்களும் தங்கள் வீடுகளை காலி செய்யும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி மீட்பு சேவைகளுக்காக ஏராளமானோரை திரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் Norfolk பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக கிழக்கு மற்று மேற்கு கடற்கரைகளில் உள்ள பகுதிகளில் மிகப்பெரிய ஆபத்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் ஸ்காட்லாந்து பகுதிகளில் பனியின் தாக்கும் சற்று குறைவாக இருக்கும் எனவும் இங்கு வெப்ப நிலை -3 டிகிரிகளில் இருந்தால், அங்கு அதன் வெப்ப நிலை சற்று மிதமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதன் ஆபத்து இன்றும் தொடரும் எனவும் அதனால் சாலை வழிகளில் செல்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் கவனமுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். பிற்பகலுக்கு பின்னர் புயலின் தாக்கம் மற்றும் குளிரின் தாக்கம் குறையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


இயக்குநர் கவுதமன் மீது போலீஸ் தடியடி! அவனியாபுரத்தில் பரபரப்பு (வீடியோ)

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர்கள் அமைப்பு, தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு, தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று வேனியில் ஏற்றினர். இதனை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தடுத்ததால் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

நிலவுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்! புதிய கண்டுபிடிப்பு...


சந்திரனுக்கு தற்போது வயது 4.51 பில்லியன் ஆண்டுகள் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் குறித்த ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஆய்வின்படி, ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்கப்படும் ‘தீய்யா’ நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதன் காரணத்தினாலேயே சந்திரன் உருவானது.

சூரியக்குடும்பம் உருவான பிறகு 6 கோடி ஆண்டுகள் கழித்தே சந்திரன் உருவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த ஆய்வை மேற்கொண்ட கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

தீய்யா என்ற கிரகம் மோதியதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை தகவல்கள் மூலம் ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

சந்திரனின் வயதைக் கணக்கிடுவது மிக மிகக் கடினம், ஏனெனில் பலதரப்பட்ட பிற பாறைச்சிதறல்களின் ஒட்டுவேலைதான் சந்திரன் என்பது. ஆனாலும் விஞ்ஞானி பர்போனி 8 ஜிர்கான்களை அதன் ஆதி வடிவத்தில் ஆய்வு செய்ய முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதில் உள்ள யுரேனியம் எவ்வாறு காரீயமாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்றும் லியூட்டியம் என்பது எவ்வாறு ஹாஃப்னியம் என்பதாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்பதையும் பர்போனி ஆய்வு செய்துள்ளார்.

இந்த மூலக்கூறுகளை ஆய்வு செய்தே சந்திரனின் வயதை மறு நிர்ணயம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடுமையான பனி பொழிவு...! 60 பேர் வரையில் பலி....


ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களும், வயோதிபர்களுமே அதிகளவில் உயிரிழந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடு இல்லாதவர்களுக்கு பாடசாலைகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முகாம்களுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் போலாந்தில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவு காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் மகள் எப்படி வளர்ந்தனர்? ஜனாதிபதி ஒபாமா உருக்கமான பேச்சு


அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தன்னுடைய இரண்டு மகள்கள் வெள்ளை மாளிகையில் எப்படி வளர்ந்தனர் என்பது குறித்து ஒபாமா உருக்கமாக பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது சாஷா மற்றும் மலியா மகள்களுடன் 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்தார்.

ஜனாதிபதியின் அதிகாரத்துடன் தந்தை உள்ளபோது தன்னுடைய மகள்கள் அதனை தவறாக பயன்படுத்தி விடுவார்களா என ஒபாமாவும் மீச்செல்லும் கவலைக் கொண்டனர்.

ஆனால், பெற்றோரின் கவலையை போக்கும் வகையில் இருவரும் 8 ஆண்டுகளாக அன்பாகவும் மரியாதையாகவும் வளர்ந்துள்ளனர்.

வெள்ளை மாளிகை அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் மிகுந்த மரியாதையாகவும் பழகினர். இது பெற்றோர்களாகிய எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.
மகள்களை இந்தளவிற்கு வளர்த்த தன்னுடைய மனைவியான மீச்செலுக்கு தான் இந்த பெருமை அனைத்தும் சேரும் என ஒபாமா உருக்கமாக பேசியுள்ளார்.

Photos