Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

விஷ்வா சதுரங்கவின் அசத்தல் ஆட்டம்- ஜிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை


தென் ஆப்பிரிக்காவில் இலங்கை, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதிய இலங்கை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களே அசத்தினர்.

4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் விஷ்வா சதுரங்க 94 பந்துகளில் 90 ஓட்டங்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

இவருக்கு உறுதுணையாக அவிஷ்கா பெர்னாண்டோ(48)-ம் அசத்த இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 19 ஓவர்களில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று கொடுத்தார், போட்டியின் ஆட்ட நாயகனாக விஷ்வா சதுரங்க தெரிவு செய்யப்பட்டார்.

தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்: விஸ்வநாதன் ஆனந்த்....


தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் என பலரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இலங்கை வீரர்கள்! டி20 அணி விபரம்


தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

டி20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி துடுப்பாட்ட வீரரும் மிதவேக பந்துவீச்சாளருமான புதுமுக வீரர் திக்ஷில டி சில்வா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இலங்கை டி20 அணி, அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்), தினேஸ் சந்திமால் (துணைத்தலைவர்), குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, சீகுகே பிரசன்ன, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், இசுறு உதான, அசேல குணரத்ன, சச்சித்ர பத்திரண, லக்ஷான் சந்தகன், திக்ஷில டி சில்வா, நுவான் குலசேகர.

இந்நிலையில், அணியில் இடம்பிடித்துள்ள தனுஷ்க குணதிலக, சீகுகே பிரசன்ன, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரத்ன, லக்ஷான் சந்தகன், நுவான் குலசேகர ஆகியோர் நாளை தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


முர்ரேவுக்கு முடிவு கட்டிய ஜோகோவிச்!


கதார் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியிலவ் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியம் பட்டம் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், கடந்த 28 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த முர்ரேவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோகோவிச்.

முன்னதாக மூன்று மணிநேரம் நடந்த போட்டியின் முடிவில் 6-3, 5-7, 6-4 என்ற செட்களில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நோவாக் ஜோகோவிச்.

தோல்விக்கு பின்னரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டி முர்ரே தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். செர்பிய நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் இரண்டாம் இடத்தில் உளளார்.

2016- இன் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் யார் தெரியுமா?


டி20 என்பது மூன்றரை மணி நேர ஆட்டம் தான். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அடுத்தது என்ன அடுத்தது என்ன என அனைவரையும் எதிர்பார்க்க வைக்கும்.

இதனாலேயே இதற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ஷேர் மார்க்கெட்டைப்போல ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெரும் பாக்கியம் டி20 பேட்ஸ்மேன்களுக்குத் தான் அதிகம் கிடைக்கிறது.

டி20 கிரிக்கெட் விளையாட்டிற்கு இணை டி20 கிரிக்கெட் தான் என்று கூறினால் மிகையாகாது.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டிற்கான டி20 டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார் யார்?

பத்தாவது இடம்: மசகட்சா (ஜிம்பாவே)

சமீப வருடங்களில் ஜிம்பாவே வீரர்களிலே மசகட்சா மட்டும் தான் ஐ.சி.சி டாப் 10 வரிசைக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

தொடக்க வீரராக களமிறங்கி அணியின் தேவையைப் பொறுத்து அடித்து ஆடுவதிலும், நிதானமாக ஆடுவதிலும் கைதேர்ந்தவர் மசகட்சா.

இந்த ஆண்டில் மட்டும் இவர் மூன்று அரை சதம் விளாசியுள்ளார்.

மேலும், வங்கதேசத்துடனான ஒரு போட்டியில் 58 பந்தில் 93 ரன் வெளுத்து நாட் அவுட்டாக இருந்தார். சதம் அடிக்கமுடியவில்லையே என போட்டி முடிந்தபிறகு வருத்தப்பட்டார் இவர்.
ஒன்பதாவது இடம்: ரோஹித் ஷர்மா (இந்தியா)

மிகவும் டேஞ்சரான பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா. இவரை விரைவில் அவுட்டாக்கியே தீர வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூட ஒரு போட்டியில் கூறியிருந்தார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தவர் உல்க கோப்பையில் தொடர்ந்து சொதப்பி விட்டார்.

அந்த இன்னிங்ஸில் இன்னும் கொஞ்ச நேரம் அவர் ஆடியிருக்கலாமே என்பது தான் இந்திய ரசிர்களின் வருத்தம்.

இருந்த போதிலும், இந்த ஆண்டின் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் இந்திய வீரர்களில் இவரும் ஒருவர்.


எட்டாவது இடம்: ஜேசன் ராய் (இங்கிலாந்து)
இங்கிலாந்து அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சரவெடி பேட்ஸ்மேன் ஜேசன்ராய்.

உலகக்கோப்பையில் அத்தனை அணிகளையும் நியூசிலாந்து கதறவிட்டுக் கொண்டிருந்தது. இந்தியா உட்பட அத்தனை அணிகளையும் வென்று ஒரு போட்டியில் கூட தோற்காத அணி என வளைய வந்தது.

இங்கிலாந்து அணியில் இந்த ஆண்டில் ஒன்மேன் ஆர்மியாக வலம் வருபவர் ஜேசன் ராய்.


ஏழவது இடம் முகமது ஷஷாத் (ஆஃப்கானிஸ்தான்)

ஆஃப்கானிஸ்தான் அணியின் பிள்ளையார் இவர் தான்.

தொப்பையும் தொந்தியுமாக ஆள் பார்க்க மிரட்டும் வகையில் இருக்கும் இவர் நம்மூர் ஷேவாக் போல எல்லா பந்தையும் எல்லைக் கோட்டுக்கு விரட்டுவதே இவரது வேலையாக கொண்டுள்ளார்.

உங்களுக்கு தெரியுமா? இவர் ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

இவர் ஒரு ஜாலியான ஆஃப்கானிஸ்தான் ஷேவாக் ஆவார்.


ஆறாவது இடம் ஜோ ரூட் (இங்கிலாந்து)

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடிய அதிரடியான ஆட்டம் அனைவராலும் மறக்கமுடியாது. ஏன் தென் ஆப்பிரிக்க அணியே மிரண்டு போனது.

அன்றைய தினம் ஒருவேளை பிராத்வெயிட் அந்த நான்கு பந்துகள் மேஜிக்கை நிகழ்த்தியிருக்காவிட்டால் ரூட் தான் உலகக் கோப்பை நாயகனாக வலம் வந்திருப்பார்.


ஐந்தாவது இடம் ஹாசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா)

என்னாச்சி அட உண்மையாதாம்பா..! இவர் தான் ஐந்தாவது இடம்...டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட சரியாக ஆடாத இவர் எப்படி டி20 யி என்று தானே யோசிக்கிறீர்கள்.

இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கேப்டவுனில் 62 பந்தில் 97 ரன் விளாசினார் ஆம்லா. டிவில்லியர்ஸை விட இவர் தான் டி20 போட்டிகளில் எதிரணிக்கு கடும் டார்ச்சராய் இருந்தார்.

நம்பவில்லையென்றால் கீழே புள்ளிவிவரத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்.நான்காவது இடம் மார்டின் கப்டில்( நியூசிலாந்து)

இந்த ஆண்டின் டி20 உலக கோப்பையை சிக்சர் அடித்து வான வேடிக்கையுடன் ஆரம்பித்தவர் கப்டில். எந்த தருணத்திலும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருபவர்.

தனி ஆளாக நின்று பந்து வீச்சாளர்களை மிரள வைப்பவர்.


மூன்றாவது இடம் ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)

அதிரடியாக ஆட்டத்தை துவங்கும் இவர் இந்தாண்டில் ஒரு முறை மட்டுமே ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினார்.

ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்ற நிலை எப்போதெல்லாம் இங்கிலாந்து அணிக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பட்லரை அழைப்பார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.

அநேகமாக டி20 போட்டிகளில் இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் பொறுப்பு இவரைத் தேடி வரலாம்.


இரண்டாவது இடம் மேக்ஸ்வெல் ( அவுஸ்திரேலியா)

தனது அதிரடியான ஆட்டத்தினால் இலங்கை வீரர்களை திக்குமுக்காட செய்தவர் மேக்ச்வெல்.

பவுலர்கள் எந்த விதத்தில் பந்து வீசினாலும் களமிறங்கி பட்டையை கிளப்பும் இந்த இந்த நாயகன் டி20 ஃபார்மெட்டின் சூப்பர் ஸ்டார்.முதலிடம் விராட் கோஹ்லி (இந்தியா)

களத்தில் இறங்கி விட்டால் தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி விடுவார் இந்திய வீரர் விராட் கொஹ்லி.

டவிராட் கோஹ்லி தயவு செய்து நீங்கள் பேட்டிங் செய்வதை நிறுத்துங்கள், என்றும், விராட் ஒரு ஏலியன்" என்றும் புகழ்ந்து பலர் பலவிதமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு டி20 போட்டியில் விராட் கோஹ்லிக்கு பந்து வீசியவர்களுக்கு மந்திரிக்க தான் வேண்டும். அந்த அளவிற்கு மிரட்டியுள்ளார் விராட்.

இவருக்கு எப்படி ஃபீல்டர்கள் நிறுத்துவது என்றே தெரியவில்லை" என எதிரணி கேப்டன்கள் புலம்புகிறார்கள்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் கோஹ்லி.

உலகக்கோப்பையில் அவர் ஆடிய சரவெடி ஆட்டம், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை நொறுக்கிய கதை ஆகியவற்றை ரீவைண்ட் செய்து பார்ப்பதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வு தரும்.அடேங்கப்பா..! இவ்வளவு பணத்தை உதறித் தள்ளினாரா ரொனால்டோ....அதிர்ச்சி தகவல்


போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சீனாவின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கால்பந்து வீரர்களில் சிறந்தவராக உள்ளார். இவர் தற்போது ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடி வருகிறார்.

இந்நிலையில் ரொனால்டோ சீனாவின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளதாக ஏஜண்டான ஜோர்ட் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரொனால்டோவிற்கான 300 மில்லியன் யூரோ ஒப்பந்தம் சீனாவிடம் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தது.

அதுமட்டுமல்லாது வருடம் 100 மில்லியன் ஊதியத்துடன் இந்த ஒப்பந்தம் வந்தது. எல்லாமே பணம் மட்டும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

ரொனால்டோ தான் உலகத்திலே சிறந்த வீரர். அவர் ரியல் மாட்ரிட் அணியில் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருக்கு பணம் எல்லாம் பெரிய விடயம் இல்லை.

சீனாவின் சந்தை பெரிதாக இருந்தாலும் கூட அங்கு எல்லாம் ரொனால்டோ போக மாட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தாண்டு இறந்த முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்!


2016ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்த சில ஜாம்பவான்களை கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது.

Martin Crowe (1962-2016)

நியூசிலாந்து அணியின் கேப்டனாக, வலது கை ஆட்டகாரராகவும் சிறப்பாக செயல்ப்பட்ட இவர் 1982லிருந்து 1995 வரை அந்த அணிக்காக 77 டெஸ்ட் போட்டிகளிலும், 143 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2012ல் ஏற்ப்பட்ட நிண்நீர் சுரப்பு புற்றுநோயை வெல்ல முடியாமல் இந்த வருடம் மார்ச் 3ஆம் திகதி மார்டின் காலமானார்.Tony Cozier (1940-2016)

கமண்டரியில் இவர் கம்பீர குரலுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கடந்த 1965 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தனது கமண்டரி பயணத்தை தொடங்கிய இவர் பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மே மாதம் 11ஆம் திகதி இறந்தார்.Hanif Mohammad (1934-2016)

வலது கை பாகிஸ்தான் அணி ஆட்டகாரரான ஹனீப், டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கியவர் ஆவார். பாகிஸ்தான் அணிக்காக 1952லிருந்து 1969வரையிலான காலகட்டத்தில் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3915 ஓட்டங்கள் எடுத்துள்ள இவர் சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மரணமடைந்தார்.Ken Higgs (1937-2016)

இடது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை வேகபந்து வீச்சாளராகவும் இங்கிலாந்து அணியில் சிறந்து விளங்கிய கென், 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20.74 என்ற சிறந்த ஆவரேஜுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர போட்டியில் 511ல் கலந்து கொண்டு 1536 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி காலமானார்.


உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்கும் வீரர்கள்! ஒரு நொடிக்கு இவ்வளவா?


உலக அளவில் கால்பந்தாட்டத்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ என பல பிரபலங்களை தங்கள் ஹீரோக்களாக நினைத்து வாழ்பவர்கள் ஏராளம்.

அந்த வகையில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

  1. Carlos Tevez (Shanghai Shenua) - £615,000-per-week
  2. Oscar (Shanghai SIPG) - £400,000-per-week
  3. Cristiano Ronaldo (Real Madrid) - £365,000-per-week
  4. Gareth Bale (Real Madrid) - £350,000-per-week
  5. Lionel Messi (Barcelona) - £336,000-per-week (after tax)
  6. Hulk (Shanghai SIPG) - £320,000-per-week
  7. Paul Pogba (Manchester United) - £290,000-per-week
  8. Graziano Pelle (Shandong Luneng) - £290,000-per-week
  9. Neymar (Barcelona) - £275,000-per-week
  10. Wayne Rooney (Manchester United) - £260,000-per-week

Photos