Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

நான்கு கால்கள், இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் பிறந்த குழந்தை


இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு நான்கு கால்கள், இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் குழந்தை பிறந்துள்ளது.

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னபசவா- லலிதம்மா தம்பதியினர்.

கர்ப்பமாக இருந்த லலிதம்மாவுக்கு கடந்த 21ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நான்கு கால்கள் மற்றும் இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் குழந்தை பிறந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக விஜயநகர மருத்துவ அறிவியல் கழத்தின் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் இக்குழந்தை கடவுளின் பரிசு எனவும், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப முடியாது எனவும் லலிதம்மா தெரிவித்துள்ளார்.

இவரிடம் பேசி சமாதானப்படுத்திய மருத்துவர்கள், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

18 வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் மீட்பு! 26 வருடங்களாக நடந்த கொடுமை...


இலங்கையில் நிலவிய போர்ச் சூழலில் காணாமல்போன பெண் சுமார் 26 வருடங்களின் பின் திரும்பி வந்துள்ள நிலையில் அவர் குறித்து மேலும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்து வீட்டில் தனித்து இருந்த நிலையில் நாவலப்பிட்டியிலுள்ள கணவரின் உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணை கொழும்புக்கு அழைத்துச் சென்று வீடொன்றில் ஒப்படைத்தனர்.

அப்போது குறித்த பெண்ணுக்கு 18 வயது மாத்திரமே.

கொழும்பில் குறித்த பெண்ணை வீட்டுச்சிறையில் வைத்துள்ளார்கள். இது குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விரிவான செய்திகளை வழங்கியிருந்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தகவலை குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இவர் அந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அங்குள்ள ஆண்களின் உடைகளை கழுவும் சந்தர்ப்பங்களில் அதற்குள் தவறி விடப்படும் பணத்தை இரகசியமாக சேமித்து வைத்துள்ளார்.


அவ்வாறு சேமித்து வைத்த பணத்தில்தான் குறித்த பெண் தப்பி வந்து தனது செலவுகளுக்காகவும், வீட்டிற்கு செல்வதற்கான பயண செலவையும் கவனித்துள்ளார்.

43 வயதாகும் பத்மகுமாரி என்பவரே இவ்வாறு 26 வருடங்களின் பின் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து திரும்பி வந்துள்ளார்.


பத்மா குமாரி காணாமல் போயிருந்த காலப்பகுதியில் இவரின் உறவினர்களால் இவருக்கு ஆத்ம சாந்தி கிரியைகள் செய்யப்பட்டுள்ளதுடன் கங்கஹியல கோரல பிரதேசசெயலகத்தின் ஊடாக காணாமல் போனோருக்கான நிவாரணமும் பெறப்பட்டுள்ளதோடு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

18 வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் மீட்பு! 26 வருடங்களாக நடந்த கொடுமை

 

 

மனிதர்களுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: ஆதாரம் இதோ


இந்தியாவில் பெண் ஒருவருக்கு தடித்த வெள்ளை தோல், சிவப்பு கண்கள் மற்றும் தலைகீழ் உதடுகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்திலே இந்த குழந்தை பிறந்துள்ளது, குழந்தையின் பெற்றோர் குழந்தை ஏற்க மறுத்துள்ளனர், தாய் குழந்தையை தூக்கி பால் கொடுக்க மறுத்து வருகிறார்.

மேலும், விசித்திரமாக பிறந்த குழந்தையை காண மக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, இது ஏலியன் குழந்தை இல்லை, லட்சத்தில் ஒரு குழந்தை Harlequin-type ichthyosis என்னும நோயால் பாதிக்கப்பட்டு பிறக்கிறது.

அரிய மரபணு நிலைமை காரணமாக தோல் மற்றும் முகத்தில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியான பின் டொனால்டு டிரம்ப் சந்திக்க போகும் முதல் பெண் தலைவர் யார் தெரியுமா?


அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்ற சூளுரையோடு தன் பயணத்தை தொடங்கியுள்ளார் டிரம்ப்.

இந்நிலையில், அடுத்த வாரம் டொனால்டு டிரம்ப் முதன் முதலாக தான் பதவியேற்றபின் ஒரு வெளிநாட்டு தலைவரை சந்திக்கவுள்ளார்.

பிரித்தானியா நாட்டின் பிரதமரான தெரேசா மேவை தான் டிரம்ப் சந்திக்கவுள்ளார். இந்த விடயத்தை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் Sean Spicer உறுதிசெய்துள்ளார்.

பிரித்தானியா நாடானது ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியுள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு வர்த்தக ஒப்பந்தம் விடயமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

சமீபத்திய பேட்டியில் கூட பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது நல்ல விடயம் என டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மெக்சிகோவின் ஜனாதிபதி Enrique Pena Nietoவை ஜனவரி 31ல் சந்தித்து பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உலகிலேயே இந்த விடயத்தில் சக்தி வாய்ந்த நாடு இது தான்! உங்க நாடு எந்த இடத்தில்?


Passport Index என்ற Magazine உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இலவச விசா மூலம் அதிகளவில் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் நாடுகளின் பட்டியலை பொறுத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஜேர்மனி முதலிடத்தில் தேர்வாகியுள்ளது, ஜேர்மனி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள 158 நாடுகளுக்கு புறப்படும் முன்னர் விசா இல்லாமல் செல்லலாம்.

இரண்டாம் இடத்தில் ஸ்வீடன் நாடும், மூன்றாம் இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன. மீதி ஏழு இடங்களையும் ஐரோப்பியாவில் உள்ள நாடுகளான டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, நார்வே, பிரித்தானியா ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.

இந்த பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் தரவரிசை பட்டியல் கீழே,


அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு..!


அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பு இன்று பதவியேற்கவுள்ளார். இது குறித்த நிகழ்வு தலைநகர் வாஷிங்டன் ‘கேபிடோல் பில்டிங்கில்’ நடக்கிறது. இங்குதான் ‘வெள்ளை மாளிகையும் அமைந்துள்ளது.

இந்த வண்ணமிகு விழாவில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, மிட்ஷல் ஒபாமா, பிற முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ், பில் கிளின்டன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன், டொனால்ட் டிரம்ப் உடனான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட் பதவி பிரமாணம் செய்து வைப்பார். ஜனாதிபதியை தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைக் பென்ஸ், அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு 2.5 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப், தனது ஆரம்ப உரையை நிகழ்த்துவார்.

இதனையடுத்து, அமெரிகாகவின் புதிய ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஆகியோருக்கு பென்சில்வேனியா அவென்யுவில் இருந்து ‘வெள்ளை மாளிகை’ வரை இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவார். ட்ரம்பின் பதவியேற்பை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் பலரும் டொனால்ட் ட்ரம்ப்க்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் தான் என்பது உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

பூமியில் சிக்கிய பறக்கும் சித்திர குள்ளர்கள்.! வியப்பில் விஞ்ஞானிகள் - இன்னுமோர் உலகோடு இணையும் பூமி.!


புராணக்கதைகளில் சித்திர குள்ளர்கள் பறக்கும் மனிதர்கள், வித்தியாசமான உடலமைப்பு கொண்ட உயிரினங்கள் என பல்வேறு வகையாக உயிரினங்களைப் பற்றி கூறியிருக்கின்றன.

அந்த வகையில் தேவதைகள் என புராணங்கள் வர்ணித்தவை வெறும் கற்பனையா அல்லது நிஜத்தின் பதிவா என்ற கேள்வி நிச்சயம் எழக் கூடும்.

காரணம் கற்பனைக்கு எட்டாத வகையில் புராணக் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறான உயிரினங்கள் கண் முன் தோன்றினால்??

ஆம் இது நடக்கக் கூடும் எனவும் அவ்வாறான உயிரினங்கள் பூமிக்கு சொந்தமில்லாதவை. ஆனாலும் இப்போதும் அவை பூமியில் காணப்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆதாரமும் கிடைத்துள்ளது புராண கதைகளில் கூறப்பட்ட பறக்கும் தேவதைகளைப் போன்ற வடிவம் கொண்ட உடல்கள் கிடைத்துள்ளன.

இதனைவைத்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவை வேற்று உலகத்தை சேர்ந்தவைகள் என அடித்துக் கூறுகின்றனர். அத்தோடு பூமியின் சூழலுக்கும் ஏற்ப வாழும் உயிரினங்களே இவை என்பதனையும் கண்டு பிடித்தனர்.ஆனாலும் அவை எப்படி பூமிக்கு வந்தன? யார் கொண்டு வந்தது அல்லது தானாக பூமிக்கு வருகின்றதா? அப்படி என்றால் அதற்கான பாதை எங்குள்ளது என்ற பல கேள்விகள் பிறந்தன.

இந்தக் கேள்விகளுக்கு விடை கூறமுடியாத விஞ்ஞானிகள் மர்மமாக மறைத்து விடுகின்றனர்.

அந்த வகையில் உருவான தேடலுக்கு பதிலாகவே கருந்துளைகளை கூறிய விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தில் காணப்படும் கருந்துளைகள் மூலமாகவே இரு உலகங்களை இணைக்கும் பாதை உருவாவதாக கூறினர்.


உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்கும் கூட இதனை ஒத்துக் கொண்டுள்ளதோடு, பூமி முழுவதும் இவ்வாறான பிரபஞ்சங்களை இணைக்கும் கருந்துளைகள் காணப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

ஆனாலும் அவை எப்போது எங்கே உருவாகும் என்பது எவராலும் கண்டு பிடிக்க கணிக்க முடியாத காரணத்தினாலேயே புதிராக உள்ளது என்றும் அவற்றை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.


அதன் படி இவ்வாறான விசித்திர உயிரினங்கள் வேறு உலகத்தில் இருந்து பூமிக்கு வந்து செல்கின்றன. வந்த பாதை மறைந்து போகவே அவை பூமியில் மறைந்து வாழ முயற்சி செய்கின்றன எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இப்போது அதிகரித்துள்ள பிரபஞ்ச தேடல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையின் கூடிய விரையில் இன்னுமோர் உலகத்தோடு பூமி இணையும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


உலகையே ஸ்தம்பிக்க வைக்கும் அமெரிக்காவின் இரகசிய ஆயுதம்..! அச்சத்தில் உலக நாடுகள்....


உலகின் பெரும் வல்லரசு நாடுகளாக இருக்க கூடிய அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இன்று பல்வேறு துறையிலும் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றன.

பொருளாதாரம், இராணுவ பலம், ஆயுத உற்பத்தி என பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் தங்களை போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ளும் நோக்கிலும், கட்டுப்படுத்தும் நோக்கிலும் இன்று வல்லரசு நாடுகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மறுபுறம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்கா இரகசியமான முறையில் தயாரிக்கும் ஆயுதம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


மிகவும் இரகசியமான முறையில் தயாரிக்கபடும் இந்த ஆயுதத்தை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், இந்த ஆயுதத்தைக்கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த இடம் முழுவதுமாகவே , ஸ்தம்பித்து போய்விடும் என கூறப்படுகின்றது.

எலக்ரோ மக்னடிக் பல்ஸ் என அழைக்கப்படும் மின் காந்த புலம், ஒரு இடத்தில் உருவாகினால், அந்த இடத்தில் அமைந்துள்ள ரேடியோ தொடர்பாடல், மின்சாரம், இணையம், கணினி முதல்கொண்டு அனைத்தும் செயல் இழந்துவிடும்.

அவ்வாறான மின் காந்த புலத்தை ஒரு நேர்த்தியாக வடிவமைத்து, எறிகணை ஒன்றில் பொருத்த செய்து அதனை வெடிக்க வைப்பதற்கு அமெரிக்கா இரகசியமான முறையில் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எதிரிகளை இலக்கு வைத்து இந்த ஆயுதத்தைக்கொண்டு தாக்குதல் நடத்தினால், அந்த இடத்தினையே முழுமையாக ஸ்தம்பிதமடைய செய்ய முடியும் என கூறப்படுகின்றது.

இதன் மூலம் எதிரிகள் மீது மிகவும் இலகுவாக தாக்குதல் மேற்கொள்ள முடியும். அத்துடன், வானில் பறக்கும் விமானம், ஹெலிகொப்டர் முதல்கொண்டு அனைத்தையும் இந்த மின்காந்த புலம் பாதிப்படைய செய்யும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்கா இவ்வாறான ஆயுதங்களை தயாரித்து வருவதாக சீனா ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தது. மேலும், அமெரிக்காவின் இந்த திட்டத்தினால் உலக நாடுகள் பலவும் அச்சத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனெனில், பிற்காலத்தில் தீவிரவாதிகளும் இவ்வாறான ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்த கூடும் என உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நானும் என் மகளும் திருநங்கைகள் என்பதில் பெருமையே! ஆச்சரியம் தரும் இளம் பெண்....


அமெரிக்காவின் Detroit நகரில் Les என்னும் நபர் Erica House என்னும் தனது மனைவியோடு வசித்து வருகிறார். இவர்களுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள உள்ளனர்.

அதில் ஒரு மகளான Corey (16) தனது 11 வயதிலேயே தன் உடலில் மாற்றம் ஏற்படுவதையும் தான் ஒரு திருநங்கையாக மாற வேண்டிருக்கும் எனவும் உணர்ந்துள்ளார்.

இதை தனது தாய் மற்றும் தந்தையிடமும் கூறியுள்ளார். இந்த விடயத்தை அவர்கள் முழுமனதுடன் ஆதரித்துள்ளனர்.

Corey தற்போது திருநங்கையாக மாற சிகிச்சை பெற்று வருகிறார், ஆனால் ஆவருக்கு இன்னும் 18 வயது ஆகாததால் அவருக்கு முக்கிய ஆப்ரேஷன் தற்போது செய்ய இயலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் Corey வின் தாய் Ericaவும் தற்போது தன் விருப்பத்தின் பேரில் திருநங்கையாக மாறி வருகிறார்.

தன் மகளின் நிலையை தன்னால் உணர முடிகிறது எனவும் என்னுடைய இந்த முடிவுக்கு என் கணவர் Lesம் முழு ஆதரவு தந்துள்ளதாகவும் Erica தற்போது கூறியுள்ளார்.

Erica தற்போது ஆணாக மாறி வருவதால் தன் பெயரை Eric என மாற்றி கொண்டுள்ளார். முக்கிய சிகிச்சைகள் இவருக்கு முடிந்து விட்ட வேளையில் தனது மார்பகங்களை அகற்றும் அதி முக்கிய சிகிச்சையை Eric அடுத்த மாதம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு என்ன நடக்கவிருக்கிறது தெரியுமா? ஜெருசலேம் மத போதகரின் தீர்க்கதரிசனம்!


2022 ஆம் ஆண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும் அதிசயம் நிகழ்ந்த பின்னர் ஏசு கிறிஸ்து மறுபடியும் தோன்றுவார் என ஜெருசலேம் மத போதகர் ஒருவர் முன்னறிவித்துள்ளார்.

ஜெருசலேமில் மத போதகராக இருந்து வருபவர் யூசெஃப் பெர்ஜெர். இவர் 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து தீர்க்கதரிசனம் செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும் என்று தெரிவித்துள்ள பெர்ஜெர், அந்த காட்சிகளை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்றோடொன்று மோதவிருக்கும் அந்த நட்சத்திர கூட்டத்தின் பெயர் KIC 9832227 என தெரிவித்துள்ள அவர், அதன் பின்னர் நிகழப்போவதாக கூறும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இஸ்ரேல் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

நட்சத்திர கூட்டத்தின் மோதலுக்கு பின்னர் ஏற்படும் பெரும் அமைதியை அடுத்து ஏசு கிறிஸ்து தோன்றுவார் என பெர்ஜெர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடந்தேறும் என்பதை யூதர்களின் புனித நூலான Torah ல் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி நட்சத்திரங்கள் ஒட்டுமொத்தமாக எத்தனை உள்ளது எனவும், அவைகளின் வண்ணங்கள் என்ன என்பதும் Torah நூலில் மிகவும் விளக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி Zohar 24:17 ல் 2022 ஆம் ஆண்டு என்ன நடைபெறும் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் போதகர் பெர்ஜெர் தெரிவித்துள்ளார்.

5 கிலோ எடை கொண்ட குழந்தையின் வயிற்றில் 9 கிலோ கட்டி


மத்திய பிரதேசத்தில் 5 கிலோ எடை கொண்ட சிறுமியின் வயிற்றில் 9 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mahfuz Khan மற்றும் Madina தம்பதியினரின் 2 வயது மகள் Sohana. இக்குழந்தை Wilms Tumour கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. Wilms Tumour என்பது சிறுவயது குழந்தைகளை தாக்ககூடிய ஒருவகை சிறுநீரக புற்றுநோய் ஆகும்.

இந்த குழந்தையின் எடை 5 கிலோ ஆகும். ஆனால் வயிற்றில் படர்ந்திருக்கும் இந்த கட்டியின் எடையானது 9 கிலோ ஆகும்.

இதனால், இந்த குழந்தையால் எழுந்து நடக்கவோ, உட்காரவோ முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த கட்டியால் இக்குழந்தையின் உடலில் வலி ஏற்பட்டுள்ளது.

தற்போது இக்குழந்தையானது மத்தியபிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.அந்த மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவர் Sanjay Maheshwari கூறியதாவது, தற்போது இக்குழந்தைக்கு chemotherapy cycles முறையில் சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறோம்.

5 தடவை இந்த சுழற்சி முறை சிகிச்சையை பின்பற்றுவோம், இந்த சிகிச்சையால் இக்கட்டியானது சிறிது சிறிதாக சுருங்க ஆரம்பிக்கும். அதன் பின்னர், அறுவை சிகிச்சை முறையில் கட்டியை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

குழந்தையின் உடல் நிலை சீரான முறையில் குணமாக கடவுளையும் மருத்துவரையும் தான் நம்பியுள்ளோம் என இக்குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான பண உதவியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில செய்துள்ளன.உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி!


அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகத்திற்கு 4 வயது சிறுமி ஒருநாள் மட்டும் நூலகராக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் என்ற நூலகம் உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. இந்த நூலகத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமி டாலியா அராணா ஒருநாள் நூலகராக செயல்பட்டுள்ளார்.

அந்நாட்டின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க நூலகரான கர்லா ஹைடனுடன் இணைந்து டாலியா தனது ஒருநாள் நூலகர் பணியை மேற்கொண்டுள்ளார். இரண்டு வயது முதலே வாசிப்பைத் தொடங்கிய டாலியா தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களை வாசித்துள்ளார்.


நூலகராக இருந்த ஒருநாளில் நூலகப்பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், குழந்தைகள் எழுதிப்பழக வசதியாக வெள்ளை நிறத்தில் சுவர்பலகையை வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

தனது ஒருநாள் அனுபவம் பற்றி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டும் டாலியா, கர்லா ஹைடனுடன் பணியாற்றியது அபூர்வமான அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.

தை பொங்கலுக்காக தமிழில் வாழ்த்து கூறிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ


தை பொங்கலை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தை பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கனேடிய வாழ் தமிழ் மக்களுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தை பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழில் வணக்கத்துடன் துவங்கும் அவரது 1 நிமிட பேச்சு ஆங்கிலம், கனேடிய மொழி கலந்து இந்த வாழ்த்துச் செய்தியை அளித்துள்ளார்.


தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களிடம் இல்லாத பண்பும், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பான புரிதலும் கொண்ட பிரதமரை கனடா பெற்றிருப்பது தனிச்சிறப்பு என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒபாமா மகள்களுக்கு புஷ் பிள்ளைகள் உணர்வுப்பூர்வ கடிதம்


ஒபாமாவின் மகள்கள் சாஷா மற்றும் மாலியாவுக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மகள்கள் பார்பரா மற்றும் ஜென்னா புஷ் ஆகிய இருவரும் உணர்வுப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில் அமெரிக்க முன்னாள் முதல் குடிமகனின் வாரிசுகள் குழுவுக்கு இருவரையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கடிதம் டைம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் சாராம்சம் பின்வருமாறு:

''நீங்கள் குழந்தையாக இருந்து, கருணைமிக்க மற்றும் எளிமையான இளம்பெண்களாக மாறுவதை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். அமெரிக்க முன்னாள் முதல் குடிமகனின் வாரிசுகள் குழுவுக்கு உங்களை வரவேற்கிறோம்.

இது நீங்கள் எதிர்பார்த்திராத தருணம். ஆனால் முன்னோக்கி செல்லத்தான் வேண்டும். உங்களின் புகழ்பெற்ற, பெருமை வாய்ந்த பெற்றோரின் நிழலுக்குப் பின்னால்தான் உங்களின் வாழ்க்கைக் கதை எழுதப்படும்.

உங்களின் கடந்த 8 ஆண்டுகளின் அனுபவத்தைக் கடைசி வரை நீங்கள் சுமந்துசெல்ல வேண்டி இருக்கும். (ஒபாமாவின் பதவிக்கலாலம் 8 ஆண்டுகள். 2008-ல் ஒபாமா பதவியேற்றபோது, அதிபராக இருந்த புஷ்ஷின் மகள்கள் பார்பரா மற்றும் ஜென்னா புஷ் இருவரும் இளம்பெண்ணாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினர்.)

இந்த எட்டு வருடத்தில் நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். நிறைய பார்த்திருப்பீர்கள். சாஷாவுக்கு இப்போது 15 வயது. மாலியாவுக்கு 18. கடந்த இரண்டு காலகட்டத்தின் அனுபவங்களை உங்களின் இதயத்துக்கு அருகில் பத்திரமாக வைத்திருங்கள்.

வெள்ளை மாளிகையை உங்களின் வீடாக மாற்றிய ஊழியர்களுடமும், உங்களைப் பாதுகாத்த பணியாளர்களிடமும் தொடர்பிலேயே இருங்கள்.

மாலியா ஹார்வர்ட் கல்லூரி வாழ்க்கையில் காலடி எடுத்துவைக்க உள்ளாய். சாஷா வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாய். இருவரும் இந்த இளமைப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களின் இளம் தோள்களில் உலகத்தின் பாரம் இறங்கப்போவதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் யாரென உணருங்கள். தவறு செய்யுங்கள். அதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

கல்லூரி வாழ்க்கையை அனுபவியுங்கள். உலகத்துக்கே தெரியும். நாங்கள் அதைச் செய்தோம். உண்மையான மற்றும் பாதுகாப்பான நண்பர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

வெள்ளை மாளிகையின் அனைத்து அழுத்தங்களிலும் வாழ்ந்து பழகியிருப்பீர்கள். நீங்கள் இதுவரை சந்தித்திராத மக்களிடம் இருந்துகூட, உங்கள் பெற்றோர் மீதான கடுமையான விமர்சனங்களைக் கேட்டிருப்பீர்கள்.

உங்களை நாட்டின் முதல் குடிமக்களாக ஆக்கியோர் பெற்றோர். அவர்கள் இந்த உலகத்தை மட்டும் உங்களுக்குக் காட்டவில்லை. அதைத் தந்திருக்கின்றனர். உங்களின் அடுத்த அத்தியாயத்தை இனிதே தொடங்குங்கள்''.

இவ்வாறு புஷ் சகோதரிகள், ஒபாமா சகோதரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Thehindu-

பூமிக்கு வந்த வேற்றுக்கிரக படைகள்.! - ஒரே நேரத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான பறக்கும் தட்டுகள்.!


ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மர்ம பறக்கும் தட்டுகள் வானத்தில் வட்டமடித்த சம்பவம் ஒன்று அமெரிக்க நகர்ப்பகுதிகளில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறாக ஒரே நேரத்தில் பறக்கும் தட்டுகள் வானத்தில் தோன்றியமை இதுவே முதல் தடவை எனவும் இது பூமிக்கு ஏற்படப்போகும் ஆபத்தின் அறிகுறியா என்ற வகையிலும் ஆய்வுகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த பறக்கும் பொருட்கள் வேற்றுக்கிரகவாசிகளின் தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவையே என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இவை பயணிக்கும் வேகம் அத்தோடு நடுவானில் இவை நிலைகொண்டு பறக்கும் அடிப்படையில் வைத்து இது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் எனவும் இது தொடர்பில் வெளியாக காணொளியை ஆய்வு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல அமெரிக்க இராணுவத்தினர் இவ்வாறான சிறிய கண்காணிப்பு விமானங்களை பறக்கவிட்டு அவதானித்துள்ளனர் எனினும் அவற்றின் செயற்பாடுகளும் காமராவில் சிக்கிய பறக்கும் தட்டுகளின் செயற்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவை வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் என்றே தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வேற்றுக் கிரகவாசிகள் பூமியை ஆக்ரமிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்ததோடு பல சர்வதேச நாடுகளும் இதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இதுவும் வேற்றுக்கிரகவாசிகள் பூமியை தாக்க முன்னெடுக்கும் ஓர் முன்னாயத்தமா என்ற வகையிலும் ஆய்வுகளை தொடருகின்றனர் .

எப்படியிருப்பினும் பல மர்மங்களை மனித வர்க்கத்திற்கு தெரியப்படுத்தாமலே விஞ்ஞானிகள் மௌனம் காத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

17 முறை கருச்சிதைவு: 9 மாதத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான பெண்...


பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 9 மாதத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிங்காமில் வசித்து வந்த Lytina Kaur என்பவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த இவருக்கு 17 முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

இதற்காக இவர் பலமுறை முயன்றும் கருதங்கவில்லை. ஏனெனில் இவருக்கு 17 வயது இருக்கும்போது myeloid leukaemia எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மனிதர்களின் bone Marrow மற்றும் இரத்தம் ஆகியவற்றில் தான் இதன் தாக்கம் ஏற்படும். இந்நிலையில் இவருக்கு bone Marrow மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நோயின் தாக்கத்தின் போது இவரது உடலில் உள்ள வெள்ளை அனுக்கள் குறைந்ததன் காரணமாக நோயெதிர்ப் சக்தியை எதிர்கொள்ளும் ஆற்றல் குறைந்தது.

இந்த காரணத்தினாலேயே இவருக்கு கருத்தரித்தல் என்பது அவ்வளவு எளிதில் நடக்கும் என கூறிவிட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என முயற்சி செய்த இவர், அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த தம்பதியினரின் உதவியோடு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் இந்திய பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

இந்தியப்பெண் கருவுற்றிருந்த நேரத்தில், Lytina செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொண்ட காரணத்தினால் இவர் கருவுற்றுள்ளார். இதில், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆக மொத்தத்தில் 3 குழந்தைகள் என்று ஆகிவிட்ட நிலையில், Lytina இயற்கையான முறையில் மீண்டும் கருத்தரித்துள்ளார்.

இந்த குழந்தையானது 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 வாரத்திற்குள் குறைமாத குழந்தையாக பிறந்துவிட்டது. 9 மாதத்திற்குள் 4 குழந்தைகளுக்கு தாயான சந்தோஷத்தில் இவர் இருக்கிறார்.

இதுகுறித்து இவர் கூறியதாவது, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், எந்நேரமும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பதால் மிகவும் பிசியானா தாய் நான் என கூறியுள்ளார்.

600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விமானம்!


அமெரிக்க விமான படைக்கு சொந்தமான மர்மமான விமானம் ஒன்று 600 நாட்கள் விண்வெளி செயற்பாட்டின் பின்னர் மீண்டும் பூமிக்கு வந்துள்ளது.

X37B என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 600 நாட்களை கழித்துள்ள போதும் அதன் செயற்பாடு அல்லது எதிர்பார்ப்பு இதுவரை வெளியாகாதது சிக்கலான விடயம் என ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வரும் மே 20ஆம் திகதி அமெரிக்காவின் எட்லஸ் 5 என்ற ரொக்கட் உதவியுடன் இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கு குறைவான பிரபல்யமே படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானம் தொடர்பில் எவ்வித முக்கியமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

விண்வெளியில் குண்டு வெடித்தல் அல்லது செயற்கைக்கோள்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் அமெரிக்கா இங்கு பரீட்சித்து பார்த்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விமானம் பூமியில் இருந்து குறைந்த தூரம் வரையிலேயே அதன் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய பூமியில் இருந்து 177 கிலோ மீற்றரில் இருந்து 800 கிலோ மீற்றர் வரை பயணித்துள்ளது.

பொதுவாக சர்வதேச விண்வெளி மையம் பூமியில் இருந்து 350 கிலோ மீற்றர் தூதரத்திலேயே உள்ளது. இந்த விமானம் விசேட பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஒன்று என நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இது எதற்காக என தகவல் வெளியிடவில்லை.

எனினும் விமானத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக குறித்த ஆய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க விமான படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கால் பதிக்கும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன்...!


நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தனது சேவையினை இலங்கையிலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அகரம் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வறுமையில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு கடந்த 2006ஆம் ஆண்டு அகரம் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது.

அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் அண்மையில் இடம்பெற்ற நிலையில், அதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அவர்களும் கலந்துகொண்டார்.

இதன் போது அகரம் பவுண்டேஷன் இலங்கையில் செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து ஆராயும் நோக்கில் அகரம் பவுண்டேஷனின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?


ஒபாமா ஆட்சி காலத்தில் கடந்த ஆண்டு மட்டும் யுத்தக்களத்தில் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஒபாமா, அதுவரை நடைபெற்று வந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த நாட்டு மக்களுக்கு அளித்தார்.

தொடர்ந்து 8 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜார்ஜ் புஷ், அமெரிக்க வரலாற்றிலேயே அதிக யுத்தங்களை முன்னெடுத்த ஜனாதிபதியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஒபாமாவின் புதிய வாக்குறுதி அமெரிக்க மக்களை நெகிழ வைத்தது.

அதற்கேற்றார் போல ஆப்கான் மற்றும் ஈராக் நாடுகளில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் எண்ணிக்கையை பெருமளவில் கட்டுப்படுத்தினார்.

ஆனால் வான்வழி தாக்குதல் மற்றும் சிறப்புப்படையினரின் செயல்பாடுகளை உலகெங்கும் முடுக்கிவிட்டார்.

2016 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 138 நாடுகளில் அமெரிக்க சிறப்புப்படையினரின் செயல்பாடுகள் 70% இருந்ததாக புதிய தரவுகள் உறுதி செய்துள்ளன. இது புஷ் அரசைவிட 130% அதிகம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஒபாமா அரசு கடந்த ஓராண்டு மட்டும் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இது மணிக்கு 3 வெடிகுண்டுகள் என வீசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் பெரும்பாலான வான்வழி தாக்குதல்கள் சிரியா மற்றும் ஈராக்கில் நடந்துள்ளது. மட்டுமின்றி ஆப்கான், லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதும் ஒபாமா ஆட்சி காலத்தில் தான்.

மட்டுமின்றி ஒபாமா ஆட்சி காலத்தில் தான் ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டது. இதுவும் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளில் மட்டும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள்


இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் தெற்காசிய பகுதிகளில் பெருமளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வினை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் அந்தமான் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதிகளில் கடந்த 2012ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பாறை நகர்வு ஏற்பட்டது.

இந்த பாறை நகர்வால் இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழத்தில் புதிய பாறை அடுக்கு உருவாகியுள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள பாறை அடுக்குடன், புதிய பாறை அடுக்கும் மோதுவதால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Photos